2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அமரர் வி.தி.ஜெயரெட்னம் வெற்றிக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியில் யாழ்.பல்கலைக்கழக அணி சம்பியன்

Kogilavani   / 2012 மே 08 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

யாழ்ப்பாணம் ஜென்ரல் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே நடத்திய  50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் யாழ்.பல்கலைக்கழக அணி சம்பியனாகியுள்ளது.
அமரர் விதி.ஜெயரெட்னம் வெற்றிக் கிண்ணத்திற்க்காக 8 ஆவது ஆண்டாக நடத்தப்படும் இப்போட்டி இறுதிப் போட்டி நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலை;கழக கிரிக்கெட் அணியும் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழக அணியும் மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய பல்கலைக்கழக அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.

இவ் அணியில் அச்சுதன் 6 நான்குகள் ஒரு ஆறுகள் உள்ளடங்களாக 31 ஓட்டங்களையும்; முறையே விதுஷ் 28, ஜெயரூபன் 27, ஜெயேந்திரன் 20, லவன் 19, ஜனார்த்தனன் 17, செல்ரன் 16 ஓட்டங்களை பெற்றதுடன் உதிரிகளாக 30 ஓட்டங்களும் பெறப்பட்டன.

ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த சஞ்சயன் 7.2 ஓவர்கள் பந்து வீசி 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் விதுசன் 9 ஓவர்கள் பந்து வீசி 45 ஓட்டங்குளுக்கு 2 விக்கெட்டுக்களையும் கஜீபன் காண்டீபன் முறையே 7 ஓவர்கள் பந்து வீசி 31 ஓட்டங்களைக் கொடுத்து தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

204 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜொனியன்ஸ் விளையாடடுக்கழகம் 40.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை பெற்றது.

இவ் அணியில் அகிலன் 27, விதுர்ஷன் 16, ரஜீந்திரன் 10 ஓட்டங்களை பெற்றதுடன் உதிர்களாக 23 ஓட்டங்களும் பெறப்பட்டன.
பல்கலைக்கழக அணியைச்சேர்ந்த வலன் ஜெயரூபன் தலா 7 ஓவாகள் பந்து வீசி முறையே 12 23 ஓட்டங்களைக்கொடுத்து தலா 3 விக்கெட்டுக்களையும் விதுபாலா விதுஷ் முறையே 14 15 ஓட்டங்களைக் கொடுத்து தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.

போட்டியின் ஆட்டநாயகன், தொடர் ஆட்டநாயகன், அரையிறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வீரன் ஈ.ஜெயரூபன் பெற்றுக்கொண்டதுடன் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தின் விருதினை யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டக்கழகத்தை சேர்ந்த எஸ்.ரஜீந்திரனும் பெற்றுக்கொண்டார்.

விளையாட்டுப் போட்டிகளுக்கான ஊக்குவிப்பாளராக செயற்படும் தொழில் அதிபர் ஈ.எஸ.பி. நாகரத்தினம் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X