2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புத்தளம் கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி நிறைவு

Kogilavani   / 2012 மே 11 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)
புத்தளம் கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான 15, 17, 19 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டிகள் நேற்று வியாழக்கிழமை நிறைவடைந்தன.

தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இப்போட்டிகள் இடம்பெற்றன.

இதன்போது, 15 வயது கீழ் பிரிவு போட்டியில்; புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை அணி செம்பியன் அணியாகவும் எருக்கலம்பிட்டடி தேசிய பாடசாலை அணி ரன்னர் அப் அணியாகவும் தலவில சிங்கள வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

17 வயது பிரிவினருக்கான போட்டியில் எருக்கலம்பிட்டி தேசிய பாடசாலை அணி செம்பியனாகவும் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை அணி ரன்னர் அப் அணியாகவும் வெட்டாளை அஸன்குத்தூஸ் வித்தியாலம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட அணிகள் வடமேல் மாகாண கால்பந்தாட்ட போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X