
-கு.சுரேன்
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெரு விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
முதலாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவிலும், இரண்டாம் கட்டப் போட்டிகள் யாழ்ப்பாணத்திலும், மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியாவிலும் நடைபெற்று முடிந்த நிலையில் நான்காம் கட்டப் போட்டிகளான பூப்பந்தாட்டம், கரம் மற்றும் டென்னிஸ் போட்டிகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய கல்லூரிகளில் நடைபெற்றன.
15, 19 வயதுப்பிரிவு ஆண்கள் பெண்களுக்கான கரம் போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
15 வயதுப்பிரிவு ஆண்களில் போட்டியில் வவுனியா சுந்தரபுரம் ஜி.ரி.எம்.எஸ் அணி சம்பியனாகியது. இரண்டாமிடத்தினை வவுனியா அல் - இக்பால் மத்திய மகா வித்தியாலய அணியும், மூன்றாமிடத்தினை சென். ஜோன்ஸ் கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.
15 வயதுப்பிரிவு பெண்களில் வவுனியா அல் - இக்பால் மத்திய மகா வித்தியாலய அணி சம்பியனாகியது. இரண்டாமிடத்தினை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணியும், மூன்றாமிடத்தினை சாவகச்சேரி இந்து கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.
19 வயதுப்பிரிவு ஆண்களில் உடுவில் மான்ஸ் மத்திய மகா வித்தியாலயம் சம்பினாகியதுடன், இரண்டாமிடத்தினை சுந்தரபுரம் ஜி.ரி.எம்.எஸ் அணியும், மூன்றாமிடத்தினை சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டது.