2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வதிரி டைமன்ஸ் மிகுந்த பேராட்டத்தின் மத்தியில் சம்பியனாகியது

A.P.Mathan   / 2013 ஜூலை 02 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்
 
கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழகம் - யாழ். மாவட்ட கால்ப்பந்தாட்ட கழகங்களுக்கிடையில் கால்ப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியினை தமது விளையாட்டுக்கழக மைதானத்தில் நடத்தி வந்தது.
 
மேற்படி போட்டிகளின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்றது.
 
இறுதிப்போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் அணியினை எதிர்த்து வதிரி டைமன்ஸ் அணி மோதியது.
 
இறுதிப்போட்டியின் ஆரம்ப நிமிடங்கள் வதிரி மைடமன்ஸ் அணியின் ஆட்டத்தின் வேகம் அதிகமாகக் காணப்பட்ட, அவ்வணியின் மேல்நிலை வீரர் பிறேம்குமார் அதிடியாக முதலாவது கோலினை அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார்.
 
இந்த ஆர்ப்பாட்டம் முடிவதற்குள் ஞானமுருகன் அணிக்கு தண்டனை உதை வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திய ஞானமுருகன் அணி கோலாக்கியது. முதல் பாதியாட்டம் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலையிலிருந்தது.
 
இரண்டாவது பாதியாட்டத்தில் வதிரி டைமன்ஸ் அணி மேலதிக கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட அவ்வணி வீரர் பிறேம்குமார் மேலும் ஒரு கோல் போட்டு அவ் முயற்சியினை பயனுள்ளதாக்கினார்.
 
ஞானமுருகன் அணி தாக்குதல் ஆட்டத்தினை மேற்கொண்டு இறுதி நிமிடங்களில் கோலடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதற்கு ஏற்றாற்போல் அவ்வணி வீரர் ஜஸ்ரின் ஒரு கோல் பெற்று ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தினார்.
 
போட்டியின் நேரம் முடிவுக்கு வரும்போது இரு அணிகளும் தலா 2 கோல்கள் பெற்றிருந்தது.
 
சம்பியனைத் தீர்மானிப்பதற்காக சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் வதிரி டைமன்ஸ் அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.
 
இச்சுற்றுப்போட்டியின் ஆட்டநாயகனாக வதிரி டைமன்ஸ் அணியின் பிறேம்குமார் அணியும், தொடர் ஆட்டநாயகனாக ஞானமுருகன் அணியின் ஜெகனும், சிறந்த கோல் காப்பாளராக டைமன்ஸ் அணியின் மதன்ராஜ்ஜும் தெரிவு செய்யப்பட்டனர்.
 
இதனைவிட சிறந்த நன்னடத்தை வீரராக ஊரெழு றோயல் அணியின் கஜகோபனும், மூத்த வீரராக அதே அணியின் தர்மகுலநாதனும் (வெள்ளை), சுற்றுப்போட்டியின் சிறந்த அணியாக இளவாளை ஹென்றிஸ் அணியும் பெற்றுக்கொண்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X