2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

'சிகரத்தை நோக்கி' கிரிகெட் போட்டி

Kogilavani   / 2013 ஜூலை 07 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற த பெட்டில் ஒப் த எவறெஸ்ட்(சிகரத்தை நோக்கி) கிரிக்கெட் போட்டியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது.

மூன்றாவது ஆண்டாகவும் இடம்பெற்ற இந்த போட்டியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி இரண்டு தடவைகள் வெற்றியை தனத்தாக்கிகொண்டுள்ளது.

பெரியகல்லாறு பொதுவிளையாட்டு மைதானத்தில் இந்த கிரிக்கட் போட்டி இடம்பெற்றது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணி 45 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 220 ஓட்டங்களைப்பெற்றது.

இதில் விநோதன் 48 ஓட்டங்களையும் ஜர்சா 47 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி வீரரான நிரோன் மூன்று விக்கட்களை கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணியினர் 42.5 ஓவரில் ஆறு விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப்பெற்று வெற்றி இலக்கையொட்டியிருந்தனர்.

இதன்போது தனுராஜ் 61 ஓட்டங்களையும் நிரோன் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி வீரரான வினோதன் மூன்று விக்கட்களை பெற்றிருந்தார்.

இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளைப்பெற்று 52 ஓட்டங்களையும் பெற்ற பெரியகல்லாறு மத்திய கல்லூரி வீரர் நிரோன் சிறந்த ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

இறுதி நிகழ்வானது பெரியகல்லாறு மத்திய கல்லூரி அதிபர் நல்லதம்பி தலைமையில் இடம்பெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X