2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி

Kogilavani   / 2013 ஜூலை 08 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முதலைக்குடா விநாயகர் விளையாட்டு கழகம் தனது 52வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் உயிர் நீத்த உறவுகளின் நினைவாகவும் 'முதலூர் முழக்கம்' என வர்ணிக்கப்படும் கால்பந்தாட்ட சுற்று போட்டியை கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும்  மட்.முதலைகுடா மகா வித்தியாலத்தில் நடத்தியிருந்தது.

இதில் 29 கழகங்கள் பங்கு பற்றின. இறுதி போட்டிக்கு தெரிவான முதலைக்குடா விநாயகர் அணியினரும் மட்டக்களப்பு உதய சூரியன் அணியினரும் ஒன்றோடு ஒன்று எதிர்த்து களமாடின.

இப்போட்டி தொடரில் மட்டகளப்பு உதய சூரியன் அணியினர் முதலிடத்தையும், முதலைக்குடா விநாயகர் அணியினர் இரண்டாம் இடத்தினையும், கரையாக்கன்தீவு காந்தி அணியினர் மூன்றாம் இடத்தினையும் பெற்றுகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X