2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிளோட்டப் போட்டியில் நுவரெலியா மாணவன் சாதனை

Kogilavani   / 2013 ஜூலை 09 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேசிய மோட்டார் பந்தைய சாம்பியன்ஷிப் 2013 இற்கான மோட்டார் சைக்கிளோட்டப் போட்டிகளில் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் சாதனை புரிந்துள்ளார்.

'இலங்கை தேசிய மோட்டார் பந்தய சம்மேளனம்'  மற்றும் 'சுப்பர் மோடோ - 2013' ஆகியன இணைந்து நடத்திய மேற்படி போட்டி  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உடவளவை சர்வதேச ஓடுபாதையில் நேற்று இடம்பெற்றது.

இப்போட்டியில், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த இரந்த தாருக என்ற பதினாறு வயது மாணவன் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.

இப்போட்டியில், நாடளாவிய ரீதியில் 300 இற்;கு மேற்பட்ட மோட்டார் சைக்கிளோட்ட வீரர்கள்  கலந்துகொண்டனர்.

இதில் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் இரந்த தாருக 2ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் 85 சிசி பிரிவில் 2004 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சாதனையையும்  (2012 Record 40.55 - 2004 record  39.39) முறியடித்தார்.

மேலும் 250 சிசி ரக போட்டிகளில் சர்வதேச வீரர்களின் சவாலையும் முறியடித்து மேற்படி மாணவன் இரண்டாம் இடத்தைப் பெற்றமையானது போட்டித் தொடரின் முக்கிய நிகழ்வாகும்.

அத்துடன். நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் இதுவரை பெற்ற சிறந்த நிறைவு நேரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X