2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மானிப்பாய் பரிஷ் அணி அபார வெற்றி

Kogilavani   / 2013 ஜூலை 13 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

யாழ்.மாவட்ட துடுப்பாட்டக் கழக பிரிவு - 3 அணிகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டியில் மானிப்பாய் பரிஷ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தினூடாக யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் யாழ்.மாவட்ட துடுப்பாட்டக் கழக பிரிவு - 3 அணிகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டிகளைத் தற்போது நடத்தி வருகின்றது.

கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மானிப்பாய் பரிஷ் அணியினை எதிர்த்து ஸ்ரீ காமாட்சி அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்ற மானிப்பாய் பரிஷ; அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்கத்திலிருந்து அவ்வணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் வினோத் அதிரடியாக ஆடி 110 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, 50 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 388 ஓட்டங்களை மானிப்பாய் பரிஷ் அணி எடுத்தது. துடுப்பாட்டத்தில் மேலும் ஹரிகரன் 73, திலக் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

389 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்ரீகாமாட்சி அணி, விரைவாக ஓட்டங்கள் பெறுவதில் முனைப்பாகவிருந்தது.

எனினும் அவ்வணியினால் இலக்குகள் இழக்கப்படுவதினைத் தடுக்க முடியவில்லை. 50 பந்துபரிமாற்றங்களை முழுமையாக எதிர்கொண்ட அவ்வணி 260 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் பவிதரன் 84 ஓட்டங்களையும், சுஜன் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் வினோத் யாழினியன் தலா 3 இலக்குகளைக் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X