2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் மாவட்ட விளையாட்டு விழா

Suganthini Ratnam   / 2013 ஜூலை 15 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்ட விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் மாவட்ட விளையாட்டு விழா ஆரம்பமாகியிருந்தது.

இதற்கான நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர, மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மேல், அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இணைப்பாளர் என்.எம்.முனவ்பர், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இறுதி நிகழ்வில்; 148 புள்ளிகளை பெற்று மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அணி முதலாம் இடத்தையும் 55 புள்ளிகளை பெற்று மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட விளையாட்டு அணி இரண்டாம் இடத்தையும் 45 புள்ளிகளை பெற்று மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட விளையாட்டு அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X