2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர்களுக்கான கால்பந்தாட்ட பயிற்சி

Kogilavani   / 2013 ஜூலை 15 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

திருகோணமலை கால்பந்து லீக், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம்  என்பன இணைந்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் உதவியுடன் சிறுவர்களுக்கான கால்பந்தாட்ட பயிற்சிகளை நடத்தி வருகின்றது.

இதற்கமைவாக, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு 4 தினங்கள் ஆரம்ப பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இப்பயிற்சிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல்; 20 ஆம் திகதி வரை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 100 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தினமும் மாலை வேளைகளில் 4.00 மணி தொடக்கம் 5.30 மணி வரை இப்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

பயிற்சியினை பெறும் ஒவ்வொருவருக்கும் கால்பந்து விளையாடுவதற்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்படுவதோடு  பயிற்சியை பூர்த்தி செய்பர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட உள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X