2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வொரியஸ் அணி சம்பியன்

Super User   / 2013 ஜூலை 17 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அதிபர் எஸ். உதுமாலெப்பை வெற்றிக்கிண்ணத்தை வொரியஸ் அணி சுவீகரித்துக்கொண்டனது. இறக்காம் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வரிப்பதான்சேனை சமாதானத்திற்கான இளைஞர் அமைப்பின் மூன்றாம் வருட நிறைவை முன்னிட்டே இந்த கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டுள்ளது.

இதன் இறுதிப் போட்டியில் வொரியஸ் அணியினர் அபாரமாக விளையாடி கிண்ணத்தை சவிகரித்துக் கொண்டனர். வரிப்பத்தான்சேனை அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஐந்து ஓவர்கள் கொண்ட இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு வொரியஸ் அணியும், வி.சி. மிலான் அணியும் தகுதி பெற்று மோதிக் கொண்டதில் வொரியஸ் அணியினர் அபாரமாக ஆடி கிண்ணத்தைச் சுவிகரித்தக் கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X