2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கால்பந்தாட்ட போட்டியின் நுட்பங்கள் தொடர்பிலான பயிற்சி

Kogilavani   / 2013 ஜூலை 17 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்காரவேலு சசிக்குமார்

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் என்பன இணைந்து திருகோணமலை கால்பந்து லீக்கின் அனுசரணையில்  30 அசிரியர்களுக்கு கால்பந்தாட்ட போட்டியின் நுட்பங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்கி வருகின்றன.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

தொடர்ந்து  5 தினங்களுக்கு இப்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இப்பயிற்சியில் பங்கு கொள்ளும் ஆசிரியர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சிக்கான உபகரணங்களும் உடைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப நிழக்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் கலந்துகொண்டு  பயிற்சிகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விற்திரன், நகர சபை தலைவர் க.செல்வராசா, திருகோணமலை கால்பந்து லீக் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

பாடசாலைகள் ஒவ்வொன்றுக்கும்  தலா 3 கால்பந்துகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X