2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

திருமலை சிறைச்சாலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கிரிக்கெட் போட்டி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 23 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை சிறைச்சாலை நலன்புரிச் சங்கம் 166ஆவது சிறைக்கைதிகள் தினத்தையொட்டி அரசாங்கத் திணைக்களங்கள், படையினர் மத்தியில் அணிக்கு அறுவர் கொண்ட  மென்பந்து சுற்றுப்போட்டியினை நடத்தியது. இதில் 26 அணிகள் பங்குகொண்டன.

வேல்ஸ் கழக ஆடுகளத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை  இப்போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.  இறுதிப் போட்டி ஏகாம்பரம் மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலபதி பிரதம அதிதியாக இதில் கலந்துகொண்டார்.

இறுதிப்போட்டியில் இலங்கை விமானப்படையின் சீனக்குடா அணியினரை எதிர்த்து பன்குளம் முகாம் அணியினர் மோதினர். இதில் பன்குளம் முகாம் அணியினர் வெற்றி பெற்றனர்.

திருகோணமலை சிறைச்சாலையில்  நீண்டகால தண்டனை விதிக்கப்பட்ட கைதியான அசோக வசந்த என்பவரால் செதுக்கப்பட்ட மரத்திலான பாவைகள் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன. தனி பராக் என்பவர் இப்பாவைகளை செதுக்கி இருந்தார்.

சிறைச்சாலை அத்தியட்சகர்  ஜெகத் சந்தன வீரசிங்கவின் ஏற்பாட்டிலும் வழிநடத்தலிலும் இச்சுற்றுப்போட்டி  ஒழுங்கு செய்யப்பட்டது.

இச்சுற்றுப்போட்டியில் மூன்றாம் நிலையினை இலங்கை தரைப்படையின் கஜபா அணியினர் பெற்றுக் கொண்டுள்ளனர். இவர்கள்  இந்தியன் ஒயில் கம்பனி அணியிரை வெற்றி கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X