2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பெருந்தோட்ட கழகங்களுக்கிடையில் கரப்பந்தாட்ட போட்டி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 23 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எப்.எம்.தாஹிர்


ஊவா மாகாண பெருந்தோட்டப்புற விளையாட்டுக் கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானினால் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்துமுகமாக பெருந்தோட்ட கழகங்களுக்கிடையில் கரப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. 

இக்கரப்பந்தாட்டப் போட்டிகளில் 43 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றியதோடு 74 சுற்றுப்போட்டிகளை கொண்டதாக இக்கரப்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

இறுதி சுற்றுப்போட்டிகள் நேற்று திங்கட்கிழமை அப்புத்தளை கிளனனூர் தோட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதோடு, இறுதி சுற்றுப்போட்டியில் தம்பேதன்னை தோட்ட ரோபர் யு விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.

இக்கழகத்திற்கு 50,000 ரூபா காசோலையையும் வெற்றிக்கேடயத்தையும் அமைச்சர் செந்தில் தொண்டமானினால வழங்கிவைக்கப்பட்டதுடன், இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிக்கு ரூபா 25,000 காசோலையும் மூன்றாம் இடத்தைப் பெற்ற அணிக்கு ரூபா 10,000 காசோலையும் வழங்கிவைக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X