2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண ஹொக்கி அணியில் காரைதீவு இளைஞன்

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.ரி.சகாதேவராஜா  


மாகாண மட்ட ஹொக்கி அணியில் காரைதீவை சேர்ந்த தவராஜசிங்கம் லவன் என்ற இளைஞன் இணைத்துகொள்ளப்பட்டுள்ளார்.

காரைதீவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் வரலாற்றில் முதன்முறையாக ஹொக்கி விளையாட்டுத்துறையில் மாகாண மட்ட அணிக்கு தெரிவாகியுள்ளமை இதுவே முதல்முறையாகும்.

இதேவேளை, இவ்வணியானது விரைவில் தேசிய மட்ட போட்டியில் விளையாடவுள்ளது.

காரைதீவைச்சேர்ந்த த.லவன் (பொலிஸ் உத்தியோகத்தர்) மாகாணங்களுக்கிடையிலான தேசிய மட்ட ஹொக்கிப் போட்டிகளில் கிழக்கு மாகாணம் சார்பாக பங்குபற்றுவதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மிகக்குறைந்த வளங்களுடன் தனது திறமையை விருத்திசெய்து மண்ணிற்கு பெருமை சேர்த்த இவர் தேசிய மட்டத்திலும் வெற்றிபெற பலர் இவரை வாழ்;துகின்றனர்.

இவர், அம்பாறை மாவட்டத்தின் முன்னணி மரதன் ஓட்டவீரர்களில் ஒருவராகவும் விளங்குகின்றமை குறிப்பிடதத்தக்கது.




  Comments - 0

  • sivanathan Sunday, 28 July 2013 08:34 AM

    இந்த அணியில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 16 வீரர்கள் பங்கு கொள்வது குறிப்பிடப்பட வில்லையே. இவர்கள் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் என்பதால் புறக்கணிக்கப்பட்டதா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X