2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண விளையாட்டு விழா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
, ஜவ்பர்கான்

கிழக்கு மாகாண விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

இவ் விளையாட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவுறெவுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார விiளாட்டு மற்றும் தொழிநுட்ப அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண விiளாட்டுத்திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறும் கிழக்கு மாகாண விiளாட்டு விழாவை கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டு மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன், உதவி மாவட்ட செயலாளர் வி.வாசுதேவன், அமைச்சின் பணிப்பாளர், மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் பணி;ப்பாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் மாகாண விiளாயட்டு வீரர்களின் அறிமுக வைபவம் நடைபெற்றதுடன் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் சிங்கள விளையாட்டு வீரர்கள் பங்குகொண்டுள்ளனர்.

நாளை நடைபெறவுள்ள இறுதி நிகழ்வில் 2012ஆம் ஆண்டு தேசிய ரீதியில் விளையாட்டுத்துறையில் பிரகாசித்த விளையாட்டுவீரர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X