2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

எக்டிவ் கப் மென்பந்து சுற்றுப்போட்டி

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார்


லங்கா மில்க் புட்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற எக்டிவ் கப் மென்பந்து சுற்றுப்போட்டியில்  மிகுந்தபுரம் கழகம் சம்பியனாகியுள்ளது.

இரண்டாம் இடத்தினை வின்னிங் ஸ்டார் கழகம் பெற்றுக்கொண்டது.

இப்போட்டி திருகோணமலையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளிரும்  நடத்தப்பட்டன.

இதில் 64 அணிகள் பங்குகொண்டன. அணிக்கு ஆறுவர் கொண்ட இச்சுற்றுப்போட்டி 5 பந்து பரிமாற்றங்கள் கொண்டதாக நடத்தப்பட்டது.

சம்பியன் அணிக்கு 10,000 ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது. இரண்டாம் இடம்பெற்ற வின்னிங் ஸ்டார் கழகத்திற்கு 5,000 பணப்பரிசு வழங்கி வைக்கப்பட்டது.

இவ் இரண்டு அணிகளுக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் விளையாட்டு சீருடைகளும் மேலதிகமாக  வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராசா பிரதம அதிதியாகவும் திருகோணமலை மாவட்ட கிரிக்கட் சங்கத்தின் தலைவர் தி.பிரபாதரன் கௌரவ விருந்தினராகவும் கலந்துசிறப்பித்தனர்.

இதன் இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மிகுந்தபுரம் கழகம் 67 ஓட்டங்களை சகல விக்கட்டுக்களையும் இழந்து பெற்றனர். 

சம்பத் 29 ஒட்டம், சஞ்சீவ 22 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

பதிலுக்கு விளையாடிய வின்னிங் ஸ்டார் கழகம் 5 விக்கெட்டுக்களை இழந்து 35 ஓட்டங்களைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X