2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.காங்கேசன்துறை ஐக்கிய பெண்கள் அணி சம்பியன்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


வடமாகாண இளைஞர் விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற ரூபவாஹினி கரப்பந்தாட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில் காங்கேசன்துறை ஐக்கிய விளையாட்டுக்கழக அணி சம்பியனாகியது.

ரூபவாஹினி, தேசிய ரீதியில் மாவட்டங்களுக்கிடையிலுள்ள இளைஞர் விளையாட்டுக்கழகங்களின் கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை தற்போது நடத்தி வருகின்றது.

வடமாகாண இளைஞர் விளையாட்டுக்கழக அணிகளுக்கிடையிலா கரப்பந்தாட்டப் போட்டிகள் நேற்;று ஞாயிற்றுக்கிழமை அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழக கரப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில், முல்லைத்தீவு பாண்டியன்குளம் பெண்கள்; அணியும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஐக்கிய பெண்கள் அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இறுதிப்போட்டியின் முழு நேர ஆதிக்கமும் காங்கேசன்துறை ஐக்கிய் அணியின் பக்கம் இருந்தது.

அடுத்தடுத்து புள்ளிகள் பெற்ற காங்கேசன்துறை ஐக்கிய இளைஞர் அணி 25:09, 25:11 என்ற புள்ளிகள் அடிப்படையில் இரு செற்களையும் இலகுவாகக் கைப்பற்றி சம்பியனாகியது.

இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் காங்கேசன்துறை ஐக்கிய விளையாட்டுக்கழக அணி, தேசிய ரீதியில் நடைபெறவுள்ள போட்டிக்கு வடமாகாணம் சார்பாக பங்குபற்றவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X