2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விளையாட்டு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

Super User   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

கல்வி அமைச்சினால் பாடசாலைகள் மட்டத்தில் விளையாட்டுத்துறை அபிவிருத்தி செய்யும் வகையில் வலய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட துறைசார்ந்த  விளையாட்டு அலுவலர்களுக்கான நாடளாவிய ரீதியான பயிற்சி முகாமின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

களுத்துறை பஸ்ருன்ரட்ட தேசிய கல்வியற் கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் 24ஆம், 25ஆம், மற்றும் 26ஆம் திகதிகளில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாமில் கரப்பந்தாட்டம் வலைப்பந்தாட்டம் மற்றும் மெய்வன்மைக்கான விளையாட்டுக்களுக்கான மேலதிக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

ஏற்கனவே கடந்த மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட  முதற்கட்ட பயிற்சிகள் 23ஆம் திகதியுடன் நிறைவடைவதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பயிற்சிகள் ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வட மாகாணத்தில் இருந்து குறிப்பிட்ட ஆறு விளையாட்டுக்களுக்கும் உரிய ஆசிரியர்கள் பன்னிரெண்டு கல்வி வலயத்தில் இருந்தும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X