2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிரிக்கட் சுற்றுப் போட்டியில் ஏசியன் அணி முதலிடம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிகுமார்


இருதயபுரம் எவகிறின் விளையாட்டுக் கழகத்தின் 13 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அணிக்கு 9 பேர் கொண்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியில் ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக்கழக அணி முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இதேவேளை இப்போட்டியில், மட்டக்களப்பு கோல்டன் ஈகிள் விளையாட்டுக்கழக அணி இரண்டமிடத்தினையும் காந்திகிராமம் காந்தி ஸ்டார் விளையாட்டுக் கழகம் மூன்றாமிடத்தினையும் இருதயபுரம் எவகிறின் விளையாட்டுக் கழகம் நான்காமிடத்தினையும் பெற்றுகொண்டுள்ளன.

கடந்த மூன்று தினங்களாக இருதயபுரம் எவகிறின் விளையாட்டுக்கழக மைதானத்தில் விளையாட்டுக்கழக தலைவர் ஜே.ரெபோசன் தலைமையில் இப்போட்டிகள் நடைபெற்றன.

பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கலந்துகொண்டதுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி உப தலைவர் வி.பூபாலராஜா மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் விளையாட்டுக் கழக நிர்வாகிகள் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X