2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யங் ஒலிம்பிக்ஸ் கழகம் சம்பியன்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார்


திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய 2013ஆம் ஆண்டுக்கான சுற்றுப்போட்டியில் யங் ஒலிம்பிக்ஸ் கழகம் சம்பியனாகியுள்ளது.

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இப்போட்டி நடைபெறற்றது. இதில் டைனமிக் கழகத்தை எதிரத்து யங் ஒலிம்பிக்ஸ் கழகம் மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யங் ஒலிம்பிக்ஸ் கழகம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில்  ஆறு விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டைனமிக் கழகம் 9 விக்கட் இழப்பிற்கு  226  ஓட்டங்கைளைப் பெற்றகொண்டது.

இதில் யங் ஒலிம்பிக்ஸ் கழகம் 80 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியனாகியது.

இச்சுற்றுப்போட்டியில் சிறந்த பந்து வீச்சாளரராக  டைனமிக் கழகத்தைச் சேர்ந்த கு.தயாசேகரனும்  சிறந்த துடுப்பாட்டக்காரராக சோடியாக் கழகத்தைச் சேர்ந்த லக்சிதவும் தெரிவாகினர்.

இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன் யங் ஒலிம்பிக்ஸ் கழகத்தைச் சேர்ந்த அ.டிலானும் சுற்றுப்போட்டியின் தொடர் நாயகனான ஸ்பென்ஸ் கழகத்தைச் சேர்ந்த றிச்சர்ட்; ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். 

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் செ.பத்மசீலன் வெற்றிக்கிண்ணங்கள வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X