2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கபடியில் தங்கம் வென்ற மட்டக்களப்பு மாவட்ட அணிக்கு விருது வழங்கி கௌரவிப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்,மாணிக்கப்போடி சசிகுமார்
,எம்.எஸ்.எம்.நூர்தீன்

தேசிய ஸ்ரீலங்கா யூத் கபடி போட்டியில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட அணி வீரர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பில் வைத்தே இவர்களுக்கு இன்று சனிக்கிழமை விருது வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த இப்பாராட்டு விழா மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில்  நடைபெற்றது.மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா சிறப்பு அதிதியாகவும் மட்டக்களப்பு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

அந்த அணியைச்சேர்ந்த 12 வீரர்களும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X