2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சென்.நீக்கிலஸ் அணி இறுதிப்போட்டியில்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக்கழகம் நடத்திய 7 பேர் கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் அரையிறுதியில் சென்.மைக்கல் அணியினை 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சென்.நீக்கிலஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஆனைக்கோட்டை யூனியன் அணி யாழ்.கால்ப்பந்தாட்ட லீக்குகளின் அணிகளுக்கிடையில், அணிக்கு 7 பேர் கொண்ட கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை தமது விளையாட்டுக்கழக மைதானத்தில் நடத்தி வருகின்றது.

மேற்படி சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டம் நேற்று உரும்பிராய் சென்.மைக்கல் அணிக்கும் நாவாந்துறை சென்.நீக்கிலஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது.

முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளின் உத்வேகம் வெளிப்பட்டது. இருந்தும் சென்.நீக்கிலஸ் அணி ஒரு கோலினைப் போட்டு முதல் பாதியாட்டத்தில் 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியாட்டம் முழுமையாக சென்.நீக்கிலஸ் அணி பக்கமே இருந்தது. அவ்வணி அடுத்தடுத்து கோல்களைப் பெற்று, வெற்றியினை உறுதி செய்த வண்ணம் இருந்தது. அவ்வணி இரண்டாவது பாதியாட்டத்தில் 3 கோல்களைப் பெற்றது. பதிலுக்கு சென்.மைக்கல் அணியினால் எவ்வித கோல்களினையும் பெற முடியவில்லை.

இறுதியில் சென்.நீக்கிலஸ் அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X