2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கரம் சுற்றுப் போட்டி

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,மாணிக்கப்போடி சசிகுமார்


இலங்கை பாசடாலை மாணவர்களுக்கிடையிலான தேசிய கரம் சுற்றுப் போட்டி நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி மண்டபத்தில் ஆரம்பமான பாடசாலை கரம் சுற்றுப் போட்டி நாளை திங்கட்கிழமை நிறைவு பெறவுள்ளது.

இந்த கரம் சுற்றுப் போட்டியில் இலங்கையிலுள்ள 9 மாகாணங்களில் இருந்தும் 88 பாடசாலைகளை சேர்ந்த 684 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் கல்வியமைச்சின் கொழும்பு வலயக் கல்வியலுவலக உடற் கல்வி உதவிப் பணிப்பாளரும் போட்டி இணைப்பாளருமான எஸ்.பந்துல, மட்டக்களப்பு வலய உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளரும் சுற்றுப் போட்டி இணைப்பாளருமான இ.லவக்குமார், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி உட்பட கல்வியமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதற் தடவையாக  மட்டக்களப்பில் நடைபெறும் தேசிய கரம் சுற்றுப் போட்டியில் வடக்கு கிழக்கு மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X