2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஊரெழு றோயல் அணி சம்பியன்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 09 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


நவாலி சென்.பீற்றர்ஸ் சமநிலை தவிர்ப்பு உதையின் மூலம் சென்.மைக்கல் அணியினை வீழ்த்தி ஊரெழு றோயல் அணி சம்பயினாகியது. நவாலி சென்.பீற்றர்ஸ் விளையாட்டுக்கழகம் யாழ். கால்ப்பந்தாட்ட லீக்கின் அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் குருசுமுத்து நேசராசா ஞாபகார்த்த முதலாவது ஆண்டு கால்ப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியினை நடத்தி வந்தது. 

யாழ்.லீக்கினைச் சேர்ந்த 12 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றிய மேற்படி சுற்றுப்போட்டிகள் யாவும் நவாலி சென்.பீற்றர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று பிற்பகல் 4 மணிக்கு 40 நிமிடங்களைக் கொண்ட போட்டியாக நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் ஊரெழு றோயல் அணியினை எதிர்த்து உரும்பிராய் சென்.மைக்கல் அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில் தடுப்பற்ற உதையொன்று, ஊரெழு றோயல் அணிக்கு கிடைத்த போதும் அவ்வணி கோலாக்கத் தவிறியது. இதனால் முதல் பாதியாட்டம் கோல் எதுவும் பெறாத நிலையில் முடிவடைந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தின் 8 ஆவது நிமிடத்தில் சென்.மைக்கல் அணிக்கு தடுப்பற்ற உதை கிடைத்தது. எனினும் அவ்வுதையினை சென்.மைக்கல் முன்கள வீரர்கள் கோலாக்கத் தவறினர்.

போட்டியின் நேரம் முடிவுக்கு வருகையில் இரு அணிகளும் கோல் எதுவும் பெறவில்லை. போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டபோது, தமக்கு கிடைத்த ஜந்து வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்திய ஊரெழு றோயல் அணி கோலாக்கியது.

எனினும் சென்.மைக்கல் அணி 5 சந்தர்ப்பங்களில் இரண்டை வீணாக்க, இறுதியில் ஊரெழு றோயல் அணி 5:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இறுதிப்போட்டியின் நாயகனாக ஊரெழு றோயல் அணியின் தர்மகுலநாதன் கஜகோபனும், போட்டித் தொடர் நாயகனாக சென்.மைக்கல் அணியின் சிவலிங்கம் சுகிர்தனும் தெரிவு செய்யப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X