2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

4 கட்டங்களாக வடமாகாண கல்வித் திணைக்களத்தின் விளையாட்டுப் போட்டிகள்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 26 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை இந்தமுறை நான்கு கட்டங்களாக நடத்துவதற்கான   ஏற்பாடுகளை வடமாகாண உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் மேற்கொண்டுள்ளார்.

முதற்கட்டப் போட்டிகள் எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இதற்கான சுற்றுநிரூபங்கள் வடமாகாணத்திற்கு உட்பட்ட கல்வி வலயங்களின் கல்விப் பணிப்பாளர்களுக்கு வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

முதலாம் சுற்றில்  ஆண்கள், பெண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டிகள் வவுனியாவில் ஆரம்பமாவதைத் தொடர்ந்து ஏனைய போட்டிகள் நடைபெறவுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஏனைய போட்டிகளின் விபரங்கள் வருமாறு:-

ஆண்கள், பெண்களுக்கான  உடற்பயிற்சிப் போட்டிகள் ஜுன் மாதம் 06ஆம் திகதி

ஆண்கள், பெண்களுக்கான மட்டுப்படுத்திய மென்பந்து துடுப்பாட்டப் போட்டிகள் ஜுன் மாதம்  07ஆம் 08ஆம் திகதிகளில்

ஆண்களுக்கான பளுத் தூக்கும் போட்டிகள்  ஜுன் மாதம் 08ஆம் 09ஆம் திகதிகளில்

ஆண்கள், பெண்களுக்கான ஹொக்கிப் போட்டிகள் ஜுன்  மாதம் 09ஆம் 10ஆம் திகதிகளில்

ஆண்கள், பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டிகள் ஜுன் மாதம்  11ஆம் 12ஆம் 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X