R.Tharaniya / 2025 நவம்பர் 10 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு கரடியனாறு கார்மலை பகுதியில் மாடுகள் மேய்க்க சென்ற 55 வயதுடைய பண்ணையார் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சோமசுந்தரம் வெள்ளை தம்பி என்ற பண்ணையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
குறித்த பண்ணையார் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கார் மலை பகுதிக்கு சம்பவ தினமான இன்று காலை 11.00 மணியளவில் சென்று மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதனையடுத்து குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனகராசா சரவணன்
6 minute ago
12 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
30 minute ago
1 hours ago