2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாஞ்சாலியாக நயன்தாரா

Editorial   / 2017 ஜூலை 06 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக, அரை டஜன் திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்துக்கொண்டு பிஸி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது கன்னடத் திரைப்படமொன்றிலும் நடிக்கவுள்ளார்.

கன்னட சினிமாவில், குருஷேத்திரா என்ற சரித்திரத் திரைப்படமொன்று பிரமாண்டமாக உருவாகவுள்ளது. நாகண்ணா இயக்கவிருக்கும் இத்திரைப்படத்தின் துரியோதணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் தர்ஷனும்  கர்ணனாக ரவிச்சந்திரனும், பீஷ்மர் வேடத்தில் மூத்த நடிகர் அம்ரீஷும் நடிக்கவுள்ளனர்.

இந்தத் திரைப்படத்தில், நயன்தாராவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் பஞ்ச பாண்டவர்களின் மனைவியான பாஞ்சாலி கதாபாத்திரமே அவருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, நயன்தாராவுடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இருப்பினும், அத்திரைப்படத்தில் நடிப்பதா இல்லையா என்பது குறித்து, அவர் தனது முடிவை அறிவிக்​கவில்லையாம்.

கன்னட சினிமா, நடிகை நயன்தாராவுக்கு புது விடயமல்ல. ஏற்கெனவே, 2011ஆம் ஆண்டில் “சூப்பர்” என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, தெலுங்கில் ராமராஜ்யம் திரைப்படத்தில் சீதா தேவியின் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதனால், பாஞ்சாலி கதாபாத்திரத்தையும் அவர் ஏற்று நடிப்பார் என, அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X