2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’ஊழலற்ற சக்தியை உருவாக்க வேண்டும்’

Freelancer   / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்டின் அரசியல்வாதிகள் மத்தியில் நேர்மையான, ஊழலற்ற, மோசடியற்ற, தேசப்பற்றுள்ளவர்களை ஒன்றிணைத்து பரந்த பலமான சக்தியொன்று உருவாக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அந்த சக்தியினூடாக நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி, உரம், எரிவாயு மற்றும் பொருட்களின் விலைகள் தொடர்பில் ஒருவரையொருவர் சுட்டிக் காட்டாமல் அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (08) நடைபெற்ற ரணவிரு பிரதிபா பிரணாம விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .