2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘வேட்டையாடும் முடிவைக் கைவிடவும்’

Ilango Bharathy   / 2021 ஜூலை 29 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாட்டால், ஹரின், கட்சியின் பயணங்களைத் தடுத்து நிறுத்த
முடியாதெனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, எமது உறுப்பினர்களை வேட்டையாடுவது, நாட்டின் இன்றைய தேவையல்ல என்றார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஹரின் பெர்ணான்டோ எம்.பி வருகைதந்திருந்தார். அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸவும் வருகை தந்திருந்தார். அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே,
மேற்கண்டவாறு அவர் தெரிவித்திருந்தார்.

“ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை வேட்டையாடும் செயற்பாட்டின் மற்றுமோர் அம்சமே ஹரீன் எம்.பி  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார். அரசாங்கம் செய்ய வேண்டிய விடயம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வேட்டையாடுவதல்ல.

மாறாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் உண்மையைக் கண்டுபிடிப்பதாக
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாகும்”என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .