2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அரசமைப்பு பேரவை மீண்டும் கூடுகிறது

Editorial   / 2020 மே 11 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்கள் ஆணையகம் உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் செற்பாடுகளை மதிப்பாய்வு செய்யும் நோக்கில், அரசமைப்பு பேரவை, அதன் தலைவர் முன்னாள் சபாநாயகர் தலைமையில், இன்று (11) கூடவுள்ளது என, நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரவையின் உறுப்பினர்களான, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிரணி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட பலர், இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள இந்தப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

இந்தப் பேரவை, கொவிட்-19 நெருக்கடி, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுதல் தொடர்பாக ஆராயும் பொருட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X