2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள்

Editorial   / 2020 மே 09 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 165 பேர், இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம், பங்களாதேஷூக்கு அனுப்பி வைப்பதற்காக, நேற்று (08) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். 

அவுஸ்திரேலியா-மெல்பன் நகரிலிருந்து யு.எல் 605 என்ற விமானமே  கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளது. 
 
அவுஸ்திரேலியா- மெல்பன் நகரிலிருந்து பங்களாதேஷ் டாக்கா நகருக்கு சர்வதேச விமான போக்குவரத்து மார்க்கம் இல்லாததால், இந்த பயணிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து கட்டுநாயக்கவுக்கு அழைத்துவரப்பட்டு இங்கிருந்து பங்களாதேஷ் நோக்கி இலங்கை விமான சேவைக்குரிய விசேட  விமானம் மூலம் சென்றுள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X