2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஆணைக்குழுவுக்கு வந்தார் ரணில்

Editorial   / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

  பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீது அளித்த வாக்குமூலம் தொடர்பாக மணிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் ஆஜரானார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக அவர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக, ஏப்ரல் 17ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுற்கு ரணில் விக்ரமசிங்க முதலில் அழைக்கப்பட்டார்.

முந்தைய சம்மனுக்கு பதிலளிக்கும் விதமாக, ரணில்  விக்ரமசிங்க, ஆணையத்தில் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும், புத்தாண்டு விடுமுறை காலத்தில் தனது வழக்கறிஞர்கள் கொழும்பில் இருக்க மாட்டார்கள் என்பதால் வேறு திகதியைக் கோருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், இன்று (28) அவருக்கு தினம் வழங்கப்பட்டிருந்தது. அதனடிப்படி ரணில் விக்கிரமசிங்க ஆஜரானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X