Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 23 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை – பளுகஸ்தமன பிரதேசத்தில் மகன் தந்தையை தாக்கி கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (22) மாலை 6.10 மணியளவில், குறித்த இருவருக்கும் இடையில் இடப்பிரச்சினைக் குறித்து ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாக, மகன் தந்தையை தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தில் தாக்கப்பட்டு காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவத்தனர்.
இதேவேளை, களனி – கோனவல பிரதேசத்தில் தந்தையொருவர் மகனை தாக்கி கொலை செய்த சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது.
நேற்று (22) இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேயுபாட்டின் காரணமாக, தந்தை மகனை தாக்கியதில், மகன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், சம்பவத்தில் உயிரிழந்த நபர் 26 வயதுடையவரெனத் தெரிவித்தப் பொலிஸார், தாக்குதலுக்குட்படுத்திய சந்தேகநபர் தப்பி சென்றுள்ளதாகவும், குறித்த சந்தேக நபர் தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
19 Jul 2025