Freelancer / 2025 டிசெம்பர் 02 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாரிய அழிவுகள் குறித்து தமது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.
நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய நண்பனாக, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் இந்தியா வலுவான ஆதரவை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அமுலில் உள்ள 'சாகர் பந்து' நடவடிக்கை மூலம், நிவாரணப் பணிகளுக்கும் மீட்பு முயற்சிகளுக்கும் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் இந்தியா தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அத்துடன், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், இயல்பு நிலைக்குத் திரும்பும் முயற்சிக்கும், எதிர்வரும் நாட்களில் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து துணை நிற்கும் என்றும் இந்திய பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். (a)
5 minute ago
21 minute ago
01 Dec 2025
01 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
01 Dec 2025
01 Dec 2025