2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’இலங்கையிலிருந்து கொவிட்-19 முற்றாக ஒழிய காலமெடுக்கும்’

Editorial   / 2020 மே 11 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றொழிப்பு நடவடிக்கைகளுக்காக இதுவரை விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ள போதிலும், இந்நோய் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்படவில்லை என்று தெரிவித்த சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க, அதற்கு இன்னும் காலமெடுக்கும் என்றார்.

அதனால், கொவிட்-19 காலப்பகுதியில் நடைமுறைப் படுத்திய வாழ்க்கை முறையையே தொடர்ந்தும் கடைபிடிக்குமாறு, கொழும்பில் நேற்று (10) நடத்திய ஊடகச் சந்திப்பின்போது, பொதுமக்களை அவர் அறிவுறுத்தினார்.

நாட்டில் கொவிட்-19 பரவல் அதிகமாகக் காணப்பட்ட போது நாம் எவ்வாறு கவனமாக இருந்தோமோ, அதேபோல் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென்றும் வலியுறுத்திய அவர், அதன் மூலமே, நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென்றும் கூறினார்.

ஏதோ ஒரு வகையில் கொவிட்-19 நோயாளிகள் கண்டுபிடிக்கப்படக் கூடும். அவ்வாறு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சுகாதாரத் தரப்பினர் தயாராகவே இருக்கின்றனர் என்றும் கூறிய டொக்டர் ஜாசிங்க, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால், தாம் பட்டியலிட்டுள்ள 30 வைத்தியசாலைகளில் ஏதேனும் ஒன்றக்குச் சென்று சிகிச்சை பெறுமாறும் அறிவுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X