2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கை வரலாற்றில் பாரிய மின்வெட்டு?

Freelancer   / 2022 நவம்பர் 28 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த வருடம் ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கை வரலாற்றில் பாரிய மின்வெட்டுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்று இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

போதிய நிலக்கரி கிடைக்காவிடின் இந்த நிலை ஏற்படும் என்றும் அக்காலப்பகுதியில் பல மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.  

நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாட்டிற்காக 60,000 மெற்றிக் தொன் நிலக்கரி கொண்ட 38 கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், எனினும் இதுவரை 4 கப்பல்களே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .