2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

உப அஞ்சல் அலுவலகங்களில் தொற்றொழிக்குமாறு கோரிக்கை

Editorial   / 2020 மே 05 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

உப அஞ்சல் அலுவலகங்களில், கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, அகில இலங்கை தமிழ் பேசும் உப தபால் அதிபர்கள் தொழிற்சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அஞ்சல் மா அதிபதி ரஞ்சித் ஆரியரத்னவுக்கு, இன்று (05) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்று காரணமாக, தபால் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தபால் சேவை வழமை நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், உப அஞ்சல் அலுவலகங்களில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கையோ, கைகழுவுவதற்குரிய வசதிகளோ ஏற்படுத்தப்படவில்லையெனவும், உப அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் உப அஞ்சல் அதிபர், சிற்றூழியர்களுக்கு இதுவரையில் முகக்கவசம், கையுறை என்பன வழங்கவில்லையெனவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அஞ்சல் அலுவலகங்களில் இவ்வாறான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தும் உப அஞ்சல் அலுவலகங்களில் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அஞ்சல் அலுவலகங்களுக்கு இவ் அசாதாரண சூழ் நிலையில் வழங்கப்பட்டுள்ள வசதிகளைப் போன்று உப அஞ்சல் அலுவலகங்களுக்கும் வழங்குமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X