2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஐரோப்பாவுக்கு தப்ப முயன்ற ஈரானிய நாட்டவர் கைது

Editorial   / 2025 ஜூலை 20 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலியான பிரிட்டிஷ் கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற, 47 வயதான  ஈரானிய நாட்டவர் ஒருவர், சனிக்கிழமை (19) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் ஜப்பானின் நரிட்டாவுக்குப் புறப்படுவதற்காக, சனிக்கிழமை (19) அன்று இரவு 08.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

  அவர் வழங்கிய பிரிட்டிஷ் கடவுச்சீட்டில் சந்தேகம் அடைந்த விமான அதிகாரிகள், அவரது அனைத்து ஆவணங்களுடனும் அவரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவுக்கு அனுப்பினர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளின் போது, இந்த கடவுச்சீட்டு போலியானது என்றும், அதற்காக அவர் அந்த நாட்டில் உள்ள ஒரு தரகரிடம் US$15,000 (இலங்கை ரூபாய் 4.5 மில்லியன்) செலுத்தியதாகவும் தெரியவந்தது.

மேலும், அவரது பணப்பையை ஆய்வு செய்தபோது, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள், அவரது உண்மையான ஈரானிய கடவுச்சீட்டையும், ஜப்பானின் நரிட்டாவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு விமான டிக்கெட்டையும் அதனுள் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட ஈரானிய நாட்டவர், மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X