2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு

Freelancer   / 2025 ஜூலை 18 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபடும் நபர் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது, 

சம்பந்தப்பட்டவர் இளம் தொழில்முனைவோரை அணுகி, ஐரோப்பிய ஒன்றிய மானியங்கள் அல்லது நிதி வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தவறான வாக்குறுதிகளின் அடிப்படையில் பணம் செலுத்துமாறு, அவர்களைக் குறித்த மோசடி செய்பவர் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது ஒரு மோசடி என்று குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அனைத்து ஐரோப்பிய ஒன்றிய மானியங்களும் ஒப்பந்தங்களும் திட்டங்களின் சமர்ப்பிப்பு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தேர்வு நடைமுறைகள் மூலம் மாத்திரமே கண்டிப்பாக வழங்கப்படுகின்றன என்பதை வலியுறுத்தியுள்ளது.

நிதியுதவியை எளிதாக்க மூன்றாம் தரப்பு முகவர்களை ஈடுபடுத்துவதில்லை என்றும், மானிய விண்ணப்பங்கள் அல்லது கொள்முதல் கேள்விப்பத்திரங்களைச் செயலாக்குவதற்கு தனி ஆட்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து பணம் கோருவதில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் பொதுமக்கள் இந்த விடயத்தில் விழிப்பாகச் செயற்படுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X