2025 ஜூலை 19, சனிக்கிழமை

கடனட்டை மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள்

Editorial   / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணைய தளங்களின் ஊடாக பொருட்களை விநியோகம் செய்வதாக தெரிவித்து பொதுமக்களின் கடனட்டை தரவுகள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் போலி இணையத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறித்த பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத அவ்வாறான இணையத்தளங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொருட்களை விநியோகிப்பதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட முயன்ற சில போலி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X