2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

கப்பலில் வந்த கள்ள சிகரெட்டுகள்

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 07 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 

வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தினால் நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 09 சந்தேகத்திற்கிடமான பைகள் பரிசோதிக்கப்பட்டன.

அங்கு, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற வெளிநாட்டு சிகரெட்டுகள்,150 அழகுசாதன கிரீம்கள், லோஷன்கள் மற்றும் 10 கைக்கடிகாரங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. 

கடற்படை நடவடிக்கைகளின் காரணமாக கரைக்கு கொண்டு வர முடியாததால், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு சிகரெட்டுகள்,அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் அடங்கிய தொகுதியை கடற்படை கைப்பற்றியதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X