Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
குப்பை விவகாரத்தில் வடக்கு முஸ்லிம்கள் புத்தளத்து மக்களோடு ஒன்றித்து இருக்க வேண்டுமென, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“கொழும்பில் சேகரிக்கப்படுகின்ற குப்பை கூழங்களை புத்தளம் அறுவக்காட்டுப் பகுதிக்கு கொண்டு வந்து மீள் சுழற்சிக்கு உட்படுத்துகின்ற செயற்றிட்டமொன்றை இலங்கை நகர அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.
“இத்திட்டமானது, புத்தள பிரதேச மக்களை சூழலியல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளியுள்ளது. இது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுழல் பிரச்சினையதாகும்.
“இவ்விடயத்தில் புத்தளத்தை சேர்ந்த உலமாக்கள், சமூகத் தலைவர்கள், சமூக அமைப்புகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
“இத்தகைய சந்தர்ப்பங்களின் போது, புத்தளத்தில் வசிக்கின்ற வடக்கு முஸ்லிம் மக்கள் புத்தளம் மக்களுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது முழுமையாக பங்கேட்க வேண்டும்.
“கொழும்பு பிரதேசத்தினுடைய குப்பை கூளங்களை கொழும்பு மாவட்டத்தில் அல்லது மேல் மாகாணத்தில் சேகரித்து மீள்சுழற்சிக்குட்படுத்தக் கூடிய ஒரு பொறிமுறையை இலங்கை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago