Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2025 ஜூலை 17 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன.
இதனையடுத்து, தலா 50,000 ரூபாய் ரொக்கம் மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடைசெய்து, அவர்களின் கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், பிரதிவாதிகளின் கைரேகைகளைப் பெற்று அறிக்கைகள் கோரப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
41 minute ago
46 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
52 minute ago