2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கைதிகளுக்கு சலுகைகள் வழங்க தீர்மானம்

Editorial   / 2020 மே 03 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தண்டனை சட்டக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள 33 குற்றங்களுக்கு உட்படாத கைதிகளுக்கு சலுகைகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெசாக் தினத்தன்று இதனை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.டபிள்யூ.தென்னக்கோன் கூறியுள்ளார்.

33 குற்றங்களில் தொடர்புபடாத 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை இவ்வாறு விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி வரை அபராதப் பணம் செலுத்த முடியாத குற்றத்துக்காக  சிறையில் உள்ள கைதிகளையும் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சில கைதிகளுக்கு 7 நாட்கள் மன்னிப்பின் அடிப்படையில் செல்ல அனுமதி வழங்கவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X