2025 நவம்பர் 14, வெள்ளிக்கிழமை

சரணடைய வந்தார் துசித ஹல்லொலுவ

Freelancer   / 2025 நவம்பர் 14 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, நீதிமன்றத்தில் சரணடைவதற்காக வருகை தந்துள்ளார்.

நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, போலியான முறைப்பாடு செய்த சம்பவம் தொடர்பில் துசித ஹல்லொலுவ சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்தார். 

இந்த வழக்கு நேற்று (13) விசாரணைக்கு வந்தபோது, சந்தேக நபரான துசித ஹல்லொலுவ நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. 

இதையடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X