2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஜூன் 20இல் தேர்தல்; முடிவு நாளை

Editorial   / 2020 மே 11 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் திகதி குறிக்கப்பட்ட பொதுத் தேர்தல், ஜூன் 20ஆம் திகதியன்று நடைபெறுமா, இல்லையா என்பது தொடர்பான முடிவு, நாளை செவ்வாய்க்கிழமையே தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று (11) நடைபெறவுள்ள கூட்டத்துக்கு, அனைத்துக் கட்சிகளினதும் கூட்டணிக் கட்சிகளினதும் செயலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடனான பேச்சுவார்த்தையின் பின்னரே, குறிப்பிட்ட நாளில் தேர்தலை நடத்துவது குறித்த தீர்மானத்தை, செவ்வாயன்று ஆணைக்குழு எடுக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X