2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஜேர்மன், நோர்வேயை பாராட்டுகிறார் ரணில்

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19ஐக் கட்டுப்படுத்துவதற்கு எதிராக, ஜேர்மன் மற்றும் நோர்வே நாடுகள் முன்னடுத்துள்ள நடவடிக்கைகளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று (23) பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக, ஜேர்மன் அதிபர் அங்கலொ மேர்கெல்லுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஜேர்மன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்19 பாதிப்பை மட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், சிறந்த முன்னுதாரமானவை என்றும் அவை மற்றைய நாடுகளால் பின்பற்றக்கூடியவை என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, நோர்வே நாட்டின் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “உங்கள் அரசாங்கத்தால், சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள வியக்கத்தகு நடவடிக்கைகள், தொற்று நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட திடீர் முடிவுகளைத் தளர்த்துவதற்கு வழி வகுத்துள்ளது. நோர்வேயில் ஏற்பட்ட பாரிய பிரச்சினையைக் கட்டுப்படுத்த முடிந்தமை மனதைக் கவர்ந்துள்ளது. இந்தத் தொற்றுநோயைத் தாண்டி வரும் வலிமையும் தைரியமும் நோர்வே மக்களுக்கு உண்டு” என்று, முன்னாள் பிரதமர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X