2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

‘தேர்தல் ஆணையகத்துக்கு ஒத்துழைக்கத் தயார்’

Editorial   / 2020 மே 11 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதில், தேர்தல் ஆணையகத்துக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக, தேர்தல் கண்காணிப்பக் குழு, நேற்று (10) தெரிவித்தது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் நாயகம் ரோஹண ஹெட்டியாராச்சி, கொவிட்-19இன் மொத்த ஒழிப்புக்கான காத்திருப்பு நடைமுறைக்கு மாறானது என்று தெரிவித்தார்.

கொவிட்-19 நெருக்கடி, சமாளிக்கக்கூடிய நிலையொன்றுக்குக் கொண்டுவரப்பட்டவுடன், ஒரு கட்டத்தில் தேர்தல் நடத்தப்படல் வேண்டும் என்றும் எனினும், பூச்சிய நோயாளர்கள் வரும் வரை காத்திருப்பது, சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார்.

தேர்தல்  கால முன்னணி கண்காணிப்பு அலுவலகம் என்ற வகையில், வாக்கெடுப்பு அட்டைகள் விநியோகம் முதல், வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை வரை, முழு தேர்தல் நடவடிக்கையிலும் ஈடுபடுவது தொடர்பாக தான் அடையாளம் கண்டுள்ளதாக அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X