2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தொற்றிலிருந்து குணமடைந்த இருவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறினர்

Editorial   / 2020 மே 06 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜாஎல- சுதுவெல்ல பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி, ஐ.டி.எச் இல் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் இருவர் பூரண குணமடைந்து, இன்று (6) வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனரென, ஜாஎல நகர சபையின் பொதுசுகாதார பரிசோதகர் அநுர அபேரத்ன தெரிவித்துள்ளார்.


இன்று வீடு திரும்பியுள்ள இருவருடன் சேர்த்து மொத்தமாக ஐந்து பேர் சுதுவெல்ல பகுதிக்கு குணமடைந்து திரும்பியுள்ளதாகவும், இவர்களுள் 2 பெண்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை சுதுவெல்ல பகுதியிலிருந்து ஒலுவில் பகுதிக்கு தனிமைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட 20 பேர், 21 நாள்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் இவ்வாறு திரும்பியுள்ளவர்களை 14 நாள்கள் சுயதனிமையிலிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜாஎல நகர சபையின் பொதுசுகாதார பரிசோதகர் அநுர அபேரத்ன தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X